கடலூர்

பாலம் அமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

DIN

மழையால் சேதமடைந்த தரைப் பாலப் பகுதியில், புதிதாக பாலம் அமைத்துத் தர வேண்டும் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
 திருவந்திபுரம், ஊராட்சிக்கு உள்பட்டது ஓட்டேரி கிராமம். இந்தக் கிராமத்துக்குச் செல்வதற்காக கெடிலம் ஆற்றில் குழாய்கள் பதிக்கப்பட்டு மண்ணால் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மையில் பெய்த மழையால் இந்தத் தரைப்பாலம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டது. இதனால், பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சுமார் 10 கி.மீ. தொலைவுக்குச் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
 இதையடுத்து, புதிதாக பாலம் அமைப்பது குறித்து குறிஞ்சிப்பாடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வனுக்கு மனு அனுப்பினார்.
 அந்த மனுவில், தற்போது பெய்த மழையால் ஓட்டேரி கிராமத்துக்குச் செல்லும் கெடிலம் ஆற்றுத் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்தக் கிராமத்தில் வசித்து வரும் மாணவ, மாணவிகள் போக்குவரத்து, சாலை வசதியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
 எனவே, பொதுமக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில், புதிதாக பாலம் அமைக்க வேண்டும். தற்காலிகமாக அந்தப் பகுதியில் தரைப்பாலம் அமைத்து போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT