வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By  கடலூர்,| DIN | Published: 11th September 2018 08:49 AM

கடலூரில் காங்கிரஸ் தலைமையில் அனைத்துக் கட்சியினர் திங்கள்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 பெட்ரோல், டீசல் உயர்வைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. அதன்படி, மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையில் கடையடைப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. மாலையில், கடலூரில் தலைமை அஞ்சல் நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.வேலுசாமி வரவேற்றார். மாநிலப் பொதுக்குழு என்.குமார் முன்னிலை வகித்தார். பொதுச் செயலர்கள் ரவிக்குமார், ஓவியர் ரமேஷ், கிஷோர் குமார், பார்த்தீபன், காமராஜ், ராஜேஷ், வட்டாரத் தலைவர் ரமேஷ், ராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் திலகர் உட்பட உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் பா.தாமரைசெல்வன, மாநில நிர்வாகி த.ஸ்ரீதர், தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாணவரணி மாநில நிர்வாகி அருள்பாபு உளளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
 
 
 

More from the section

பன்றிக் காய்ச்சலுக்கு பெண் சாவு?
ரூ.ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கு: நில அளவையருக்கு 7 ஆண்டுகள் சிறை
என்எல்சி சுரங்கத்தில் பாதுகாப்பு பணிகள்
சிதம்பரம் பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்