திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

கடலூரில் குடிநீர் விநியோகம் ரத்து

By  கடலூர்,| DIN | Published: 11th September 2018 08:50 AM

புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் கடலூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என கடலூர் பெருநகராட்சி ஆணையர் (பொறுப்பு) ராமசாமி தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சியில் ஒன்று முதல் 7 வார்டுகளுக்கு உள்பட்ட பகுதிகளில் பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு அதற்கு பதில் புதிய குழாய்களை பதிக்கும் பணிகளை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பணிகள் காரணமாக வருகிற புதன்கிழமை (செப்.12) வரை இரண்டு நாள்களுக்கு அந்தப் பகுதிகளில் குறிப்பாக எஸ்.என்.சாவடி, செம்மண்டலம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. 13-ஆம் தேதி முதல் வழக்கம் போல குடிநீர் விநியோகிக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

More from the section

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்போம்: அரசுப் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டம்
வீடுகளில் உருவாகும் குப்பையை குறைக்க வேண்டும்'
வாய்க்கால் ஓரம் கிடந்த பெண் குழந்தை சடலம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்