செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

சிறந்த ஆசிரியர்களுக்கு விருது

By  சிதம்பரம்,| DIN | Published: 11th September 2018 08:49 AM

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் பகுதி பள்ளிகளில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
 சிதம்பரம் ரோட்டரி சங்க அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.பிறையோன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறந்த ஆசிரியைகளுக்கு விருது வழங்கி பேசினார். சங்கத் தலைவர் வி.செல்வநாராயணன் தலைமை வகித்தார். ரோட்டரி மண்டல துணைஆளுநர் எஸ்.நடனசபாபதி முன்னிலை வகித்தார்.
 விழாவில், அம்பலத்தாடிமடத்தெரு நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியை வி.மனோரஞ்சிதம், கனகசபை நகர் நகராட்சி தொடக்கப் பள்ளி ஆசிரியை சி.அருள்மொழி, மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியை டி.ஜெயா, பள்ளிப்படை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி ஆசிரியை அஸ்னத் கேத்ரின் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
 மேலும் விழாவில் மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர வாகனம் சங்கத்தின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.ஆர்.ரவி உதவியுடன் வழங்கப்பட்டது. ரோட்டேரியன் எஸ்.செந்தில்குமாரால் பதிப்பிக்கப்பட்ட ரோட்டரி சங்க தில்லை இதழ் வெளியிடப்பட்டது. விழாவில் ரோட்டரி மூத்த உறுப்பினர் எஸ்.ஆர்.இராமநாதன் மற்றும் சிதம்பரம் மிட்டவுன், டெம்பிள்டவுன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.
 சங்கச் செயலர் ஆர்.ராஜசேகரன் நன்றி கூறினார்.
 
 
 

More from the section

ஆதி திராவிடர்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக் கடன்கள்
சரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின பிரம்மோத்ஸவம்
லாரி மோதியதில் தொழிலாளி சாவு
ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவு
குற்றத் தடுப்பு விழிப்புணர்வு