திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

By  சிதம்பரம்,| DIN | Published: 11th September 2018 09:15 AM

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்திபெற்ற தில்லைக் காளியம்மன் கோயிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி தில்லைக்காளிக்கு மகாபிஷேகம், 209-ஆவது சிறப்பு அர்த்தசாம பூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
 முன்னதாக, கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை நடைபெற்றது.
 பின்னர் தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக் காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர்.
 ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 

More from the section

லாரி மோதியதில் பெண் சாவு
ஊரகத் திறனாய்வுத் தேர்வு
மண்டல பூப்பந்து போட்டி: சிதம்பரம் அணி வெற்றி


கடலூர் நகரில் போக்குவரத்தை மேம்படுத்த ஆட்சியரிடம் மனு

நெகிழி தடுப்பு விழிப்புணர்வு முகாம்