புதன்கிழமை 21 நவம்பர் 2018

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

By  சிதம்பரம்,| DIN | Published: 11th September 2018 09:18 AM

சிதம்பரம் அருகே அம்மாப்பேட்டை, அத்திப்பட்டு கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி, சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
 இதுதொடர்பாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தும் திங்கள்கிழமை வரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லையாம்.
 இதைக் கண்டித்து, சிதம்பரம் நுகர்பொருள் வாணிப கழகத் துணை மேலாளர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் பெ.ரவீந்திரன், சஞ்சீவி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 செவ்வாயக்கிழமை (செப்.11)காலை முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.
 

More from the section

நெல் பயிரில் இலை சுருட்டுப் புழு தாக்குதலைத் தடுப்பது எப்படி? வேளாண் துறை ஆலோசனை
வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு
பைக், நகைகள் திருட்டு:  2 இளைஞர்கள் கைது
செயல்வழிக் கற்றல் வகுப்பறைகள் திறப்பு
நவ.23-இல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம்