வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

ஆன்மிகப் பல்கலைக்கழகம் நிறுவிட  சாதுக்கள் மாநாட்டில் தீர்மானம்

DIN | Published: 12th September 2018 08:54 AM

சிதம்பரம் அருகே மஞ்சக்குழி கிராமத்தில் அமைந்துள்ள ஓங்கார ஆசிரமத்தின் மகா கயிலாயம் பகுதியில், துறவி லட்சுமிபாய் மண்டல பூஜையை முன்னிட்டு சாதுக்கள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
 மாநாட்டில் திருவண்ணாமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 60-க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர். சுவாமி ஓங்காரநந்தா அருளாசி வழங்கினார். சாதுக்களுக்கு மாகேஸ்வர பூஜை செய்விக்கப்பட்டது. மாநாட்டு ஏற்பாடுகளை ஸ்ரீகோடீஸ்வரானந்தா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். 
தீர்மானங்கள்: ஆன்மிகப் பல்கலைக்கழகத்தை அரசு நிறுவிட வேண்டும், ஆண்டுக்கு ஒரு நாள் துறவியர் தினத்தை அறிவித்து அதைக் கடைப்பிடிக்க வேண்டும், இந்திய நாட்டில் பசிப் பிணியைப் போக்க ஓங்கார ஆசிரமம் நடத்தி வரும் சாலை விருந்து போல நாடு முழுவதும் ஒரு லட்சம் சாலை விருந்துகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும், இந்தியா முழுவதும் அனைத்து மக்களும் தங்கள் வழிபாட்டு முறைப்படி ஒரே நேரத்தில் ஒரு பிரபஞ்சப் பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.
 

More from the section

விழுப்புரம், கடலூர், புதுச்சேரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை
ஆளுநர் வருகையின் போது நடத்தவிருந்த போராட்டம் ரத்து
புயல் நிவாரணப் பணிகளுக்காக ரூ. 3 கோடி வழங்கப்படும்: என்எல்சி அறிவிப்பு
குழந்தைகள் தின விழா
பாலம் அமைக்க எம்.எல்.ஏ. வலியுறுத்தல்