திங்கள்கிழமை 12 நவம்பர் 2018

நெகிழி ஒழிப்புப் பேரணி

DIN | Published: 12th September 2018 09:36 AM

குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் தலைக்கவசம் அணிதல், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணி அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் த.கனகசபை தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர் தே.மந்திரி முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. ஆசிரியர்கள் வைத்தியநாதன், ராமமூர்த்தி, ஞானசேகரன், குமார், தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் அர.விஸ்வநாதன் நன்றி கூறினார்.
 

More from the section

மனைவியுடன் தகராறு: இளைஞர் தற்கொலை
நூதன முறையில் சாராயம் கடத்தியவர் கைது
போக்குவரத்து விதி கடைப்பிடிப்பு: புதுமண தம்பதிக்கு போலீஸார் பரிசளிப்பு
தீ விபத்து: கூரை வீடு எரிந்து சேதம்
தனியார் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவி சாவு