18 நவம்பர் 2018

பல்கலை.யில்  சிறப்புச் சொற்பொழிவு

DIN | Published: 12th September 2018 09:36 AM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறையில், "கர்நாடக இசை மற்றும் இசைக் கலைஞர்களின் வளர்ச்சிக்கு அகில இந்திய வானொலியின் பங்கு' என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், புதுதில்லி அகில இந்திய வானொலி நிலைய கௌரவ ஆலோசகர் வாகீஷ் பங்கேற்று, அகில இந்திய வானொலியின் கர்நாடக இசை சேவை பற்றி சொற்பொழிவாற்றினார். நுண்கலைப் புல முதல்வர் கே.முத்துராமன் தலைமை வகித்தார். 
முன்னதாக, இசைத் துறைத் தலைவர் டி.அருள்செல்வி வரவேற்றார். உதவிப் பேராசிரியர் வி.எல்.வி. சுதர்சன் அறிமுகவுரையாற்றினார். நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

More from the section

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி  கைது


வணிக நிறுவனங்கள்: தமிழில் பெயர்ப் பலகை அமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

புயல் நிவாரண மருத்துவ முகாம்
கஜா புயல் மீட்புப் பணி: 3 மாவட்டங்களுக்கு பொருள்கள் அனுப்பிவைப்பு
நடிகர்களின் கட்சியால் எந்த விளைவும் ஏற்படாது: பொன்.ராதாகிருஷ்ணன்