சனிக்கிழமை 15 டிசம்பர் 2018

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

By  கடலூர்,| DIN | Published: 20th September 2018 08:36 AM

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 28 மி. மீ. மழை பதிவானது.
 மாவட்டத்தில் மற்ற பகுதிகளில் பெய்த மழையின் விவரம்: வானமாதேவி 25, புவனகிரி 21, குறிஞ்சிப்பாடி 18, பரங்கிப்பேட்டை 16, சிதம்பரம் 15.20, சேத்தியாத்தோப்பு 15, அண்ணாமலை நகர் 14.40, வடக்குத்து 12, கொத்தவாச்சேரி, பண்ருட்டி தலா 10, குப்பநத்தம் 5, விருத்தாசலம் 4, லால்பேட்டை 2, காட்டுமன்னார்கோவில் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.
 மாவட்டம் முழுவதும் புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிர்ச்சியான சூழல் நிலவியது.
 
 
 

More from the section

என்எல்சிக்கு நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு: அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்
தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் கிடைக்காமல் தவிப்பு!
ஆட்டோ - பேருந்து மோதல்: தாய், குழந்தை சாவு
பாரதியார் பிறந்த நாள் விழா
மார்கழி ஆருத்ரா தரிசன விழா: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று கொடியேற்றம்