அக்.15 முதல் ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்தம் 

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் வருகிற அக்.15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்தச் சங்கத்தின் மாநில

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் வருகிற அக்.15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அந்தச் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் ஜி.ஜெயச்சந்திரராஜா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் உள்ள 34,774 நியாயவிலைக் கடைகளில் சுமார் 32,500 கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் சுமார் 35 ஆயிரம் பணியாளர்களுக்கான 30 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். ஆனால், அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. 
எனவே, பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனித் துறை, டி.என்.சி.எஸ்.சி.க்கு இணையான ஊதியம், பொட்டல முறை, பணி வரன்முறை, ஓய்வூதியம், சரியான எடையில் பொருள்கள் வழங்குதல் என்பன உள்ளிட்ட 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற அக்.15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என மாநில மாநாட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்த நிலையில், கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் தலைமையில் ஊதிய உயர்வுக்கான குழுவை அரசு அமைத்துள்ளதை வரவேற்கிறோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com