கடலூர்

காவல் துறைக்கு எதிர்ப்பு: அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

விருத்தாசலம் அருகே மதப் பிரசங்க விவகாரத்தில் காவல் துறையின் நடவடிக்கையைக் கண்டித்து அரசியல் கட்சியினர், அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் புதன்கிழமை இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியகம் அமைப்பினர் அனுதியின்றி மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை போலீஸார், பிரசங்கத்தில் ஈடுபட்ட 6 பேரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதைக் கண்டித்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து, 6 பேரையும் காவல் துறையினர் விடுவித்தனர். இருப்பினும், சட்டத்துக்குப் புறம்பாக பிரசாரம் செய்ததாக அந்த 6 பேர் மீதும் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக உயர் அலுவலர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லையென காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகனை கடலூர் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றம்செய்து மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்த நிலையில், 6 பேர் மீது மங்கலம்பேட்டை போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்ததாகக் கூறியும், வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தியும் சமூக இயக்கத்தினர், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில், மங்கலம்பேட்டை சுமைதாங்கி பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு, இஸ்லாமிய தகவல் மற்றும் ஆராய்ச்சியக பொதுச் செயலர் மவ்லவி அப்துல் காதர் ஹஸனி தலைமை வகித்தார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் மவ்லவி ஆபிருதீன், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் ஹஜ்ஜி முஹம்மது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலர் முஜிபுர் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலர் இக்பால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செயலர் ராஜ்குமார், நாம் தமிழர் கட்சியின் நகரச் செயலர் ராஜாராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.   ஹாஜி.முஹம்மது நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT