ஊரகத் திறனாய்வுத் தேர்வு

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தேர்வை 1,254  மாணவ, மாணவிகள் எழுதினர்.

கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊரகத் திறனாய்வுத் தேர்வை 1,254  மாணவ, மாணவிகள் எழுதினர்.
8-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்று 9-ஆம் வகுப்பு படித்து வரும் கிராமப்புற மாணவர்களின் கல்விக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் மத்திய அரசால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வுகளை நடத்தி, அதில் தேர்ச்சிப் பெறுவோருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
 இதில், 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ்2 வகுப்பு பயிலும் வரை  ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வை கடலூர் மாவட்டத்திலிருந்து எழுதுவதற்காக 1,436 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை 7 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இதனை, 1,254 பேர் எழுதினர். 
தேர்வை மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் க.பழனிச்சாமி ஆய்வு செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com