பனை விதைகள் நடும் விழா

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பனை விதைகள் நடும் விழா பண்ருட்டி தொகுதியில் 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பனை விதைகள் நடும் விழா பண்ருட்டி தொகுதியில் 3 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் கலந்துகொண்டு பனை விதைகளை விதைத்து, பனையின் அவசியம் குறித்து பேசினார். திருவதிகை ஏரிக்கரையில் நடைபெற்ற விழாவில் பண்ருட்டி நகரச் செயலர் வேல்முருகன் தலைமையில், கடலூர் மாவட்டச் செயலர் சாமிரவி பனை விதைகளை விதைக்கும் பணியை தொடக்கி வைத்தார்.
 இதேபோல, பூங்குணம் ஏரிக்கரையில் நடைபெற்ற விழாவில் பண்ருட்டி ஒன்றியத் தலைவர் சுரேஷ், ஒன்றிய இளைஞர் பாசறை செயலர் புருசோத் ஆகியோர் தலைமையில், தொகுதிச் செயலர் வெற்றிவேலன் பனை விதைப்புப் பணியை தொடக்கி வைத்தார். சேமக்கோட்டை ஏரிக்கரையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி தொகுதி இளைஞர் பாசறை செயலர் பிரகாஷ் தலைமையில், குறிஞ்சிப்பாடி தொகுதிச் செயலர் ராமச்சந்திரன் பனை விதைப்புப் பணியை தொடக்கி வைத்தார். மூன்று ஏரிக்கரைகளிலும் மொத்தம் 1,750 பனை விதைகள் விதைக்கப்பட்டன.
 இந்த நிகழ்வுகளில் நிர்வாகிகள் சாதிக்பாட்சா, சரத், நிஜாமுதீன், பலராமன், புருசோத்தமன், தனுசுராமன், சத்தியசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com