பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
 இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 399 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் நேரில் அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குள்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு வழங்க வேண்டுமென துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
 கூட்டத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,400 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. மேலும், கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு ரூ.5,018 மதிப்பிலான சலவைப் பெட்டியை வழங்கினார்.
 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பானுகோபன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராஜலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனுவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com