கடலூர்

மானிய விலையில் உளுந்து விதைகள்

DIN

பண்ருட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் உளுந்து விதைகள் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.மோகன்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளிட்ட செய்திக் குறிப்பு:
பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமான சான்று பெற்ற மதுரை-1, வம்பன்-4, 5, 6,  ஆகிய உளுந்து ரக விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. 
அத்துடன் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்களும் வழங்கப்படுகின்றன. மேலும், சிறு தானிய பயிர்களான வரகு, குதிரைவாலி விதைகளும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விதை வாங்க வரும் விவசாயிகள் உடன் ஆதார் அட்டையை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT