கெடிலம் ஆற்றுச் சாலையை விரைந்து அமைக்க கோரிக்கை

கெடிலம் ஆற்றுச் சாலையை விரைந்து அமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கெடிலம் ஆற்றுச் சாலையை விரைந்து அமைக்க வேண்டுமென அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூரில் சனிக்கிழமை சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது: கடலூர் கெடிலம் ஆற்றையொட்டி கம்மியம்பேட்டை இணைப்புச் சாலை ரூ.1.10 கோடியில் புதிதாக அமைத்துத் தரப்படும் என சட்டப் பேரவையில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளிவந்து பல மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தப் பணிகளை விரைந்து தொடங்கி பொதுமக்களுக்கு தரமான சாலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களை அமைச்சர் தொடர்பு கொண்டு விவரத்தை கேட்டறிந்தார். 

கம்மியம்பேட்டை சுரங்கப் பாதை பணியுடன் சேர்த்து இந்தச் சாலை அமைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த பொது நல இயக்க கூட்டமைப்பினர், அந்த திட்டத்தோடு இணைத்து சாலைப் பணியை மேற்கொள்ள 4 ஆண்டுகள் பிடிக்கும். எனவே, உடனடியாக தனித் திட்டமாக சாலையை புதிதாக அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தினர்.  இது தொடர்பாக முதல்வருடன் பேசி தீர்வு காண்பதாக அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதியளித்தார்.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், வழக்குரைஞர் தி.ச.திருமார்பன், இணை ஒருங்கிணைப்பாளர் எம்.குருராமலிங்கம், து.துரைவேலு,  எஸ்என்கே.ரவி, கே.தர்மராஜ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com