கடலூர் பேருந்து நிலையத்தில் ஆய்வு

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் துணை இயக்குநர் டி.ஆர்.செந்தில், கடலூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் துணை இயக்குநர் டி.ஆர்.செந்தில், கடலூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
 அப்போது, உணவுப் பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளில் உரிய  உரிமம் உள்ளதா, தரமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பயன்படுத்துகின்றனரா என்பது குறித்தும் ஆய்வு 
மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
 உணவு பாதுகாப்பு குறித்து நுகர்வோர், கடைக்காரர்கள், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 
இதற்காக, பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், செய்முறைகள் நடத்தப்படுகின்றன. இந்தப் பணிகளை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
 காலாவதியான, கெட்டுப்போன உணவு விற்பனை தொடர்பாக பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) தகவல் அனுப்பலாம். இதில், புகார் தெரிவிப்பவர் தொடர்பான விவரங்கள் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தச் சேவையில் இதுவரையில் 7 ஆயிரம் பேர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் 
இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
 அப்போது, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் நா.தட்சிணாமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் பெ.நல்லதம்பி ஆகியோர் 
உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com