கடலூர்

கஜா புயல் பாதிப்பு: தோட்டப் பயிர் விவசாயிகளுக்கு அரசு உதவி

DIN

கடலூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தோட்டப் பயிர் விவசாயிகள் மீண்டும் பயிர்களை நடவு செய்திட தேவையான உதவி வழங்கப்படுமென தோட்டக்கலைத் துறை தெரிவித்தது.
 இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ர.ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கஜா புயலால் கடலூர் மாவட்டத்தில் அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர், குமராட்சி, கம்மாபுரம் ஆகிய 6 வட்டாரங்களில் தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் சேதமடைந்த பயிர்களை மீண்டும் நடவு செய்ய தேவையான நடவுப் பொருள்கள் அரசு தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தேவையான பொருள்களைப் பெற விவசாயிகள் அருகிலுள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பதிவு செய்துக் கொள்ளலாம்.
 நடவு செடிகள் தேவைப்படும் விவசாயிகள் தங்களது பெயர், நில அளவு, நில உரிமை விவரங்கள், சாகுபடி செய்ய விரும்பும் பயிர், நடவு செய்ய திட்டமிட்டுள்ள பருவம், பரப்பு போன்ற விவரங்களை தங்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் பதிவுசெய்ய வேண்டும். இதன் விவரங்கள் வட்டார அளவில் முன் வரிசைப்படி பதிவு செய்து, அரசு தோட்டக்கலை பண்ணைகளில் நடவுப் பொருள்களை உற்பத்தி செய்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். இதற்கு அரசு திட்ட விதிகளுக்கு உள்பட்டு மானியம் வழங்கப்படும். இந்த தகவல்களை உழவன் செயலி மூலமாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம்.
 மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர்களை அண்ணாகிராமம்- 90471 21898, கடலூர்- 97151 89181, விருத்தாசலம், கம்மாபுரம்-97868 67588, காட்டுமன்னார்கோவில்- 98420 15505, கீரப்பாளையம்- 70105 25669, குமராட்சி, பரங்கிப்பேட்டை- 97510 88845, குறிஞ்சிப்பாடி, நல்லூர்-84896 04087, மங்களூர்-95669 81785, மேல்புவனகிரி-94861 55971, பண்ருட்டி- 97867 23118 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT