காட்டுமன்னார்கோவிலில் அனைத்துக் கட்சிகள் கூட்டம்

காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவிலில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவகர்லால் தலைமை வகித்தார். ஆய்வாளர்கள் ஷியாம்சுந்தர், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி-ஆய்வாளர்கள் சபரிமலை, பாரதி, சக்திகணேஷ், அதிமுக ஒன்றிய செயலர் வாசுமுருகையன், முருகானந்தம், வேல்முருகன், திமுக சார்பில் சுப்பிரமணியன், பாமக சார்பில் கண்ணன், தவாக சார்பில் பிரகாஷ், மனிதநேய மக்கள் கட்சி ஜாகீர், விசிக சார்பில் மணவாளன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டத்துக்கு சீரணி அரங்கத்தை தவிர வேறு எங்கும் அனுமதி இல்லை. நகரப் பகுதியில் கூட்டம் நடத்தக் கூடாது. பிரசாரத்துக்கு சீரணி அரங்கம், கச்சேரி தெரு, ஆகிய இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரசாரத்தின் போது 3 வாகனங்களுக்கு மேல் பயன்படுத்த க்கூடாது, இரவு 10 மணிக்குள் கூட்டத்தை முடிக்க வேண்டும் உள்ளிட்ட தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த விதிகலை மீறுபவர்கள் மீது தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி ஜவகர்லால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com