ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை

கடலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் விற்பனைக்குத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசுகளால் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி (இப்ஹழ்ண்ஹள் ஞ்ஹழ்ண்ங்ல்ண்ய்ன்ள்) மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.  இந்த மீனினங்கள் மற்ற மீன்கள், பிற நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணக்கூடியது. மேலும், நமது பாரம்பரிய மீன்கள், வளர்ப்பு மீன்களையும், அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை கொண்டது. ஆகையால்,  நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது.  மேலும் இந்த மீனினங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவை சுவாசிக்கும் தன்மையும், மிகக் குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையும் கொண்டது.  இந்த மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி  மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து பல்பெருக்கம் அடையும் வல்லமை உடையது. 
மேலும், ஒருகால கட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்களை தவிர பிற இன மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.  எனவே, மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே,  இது தொடர்பான  புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ அல்லது அந்த வகை மீன்களை வளர்ப்பது, விற்பனை செய்வது கண்டறியப்பட்டாலோ அவைகளை முற்றிலும் அழிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.  மேலும், பொதுமக்களும் இந்த வகை மீன்களை கொள்முதல் செய்ய வேண்டாம். இதுதொடர்பாக அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என அதில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com