ஒருங்கிணைந்த பண்ணை முறைத் திட்டம்: பல்கலை.யில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில், ஒருங்கிணைந்த நெல், மீன், கோழி பண்ணை முறை ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில், ஒருங்கிணைந்த நெல், மீன், கோழி பண்ணை முறை ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சென்னை சர்வதேச உயிர்நுட்பவியல் மற்றும் நச்சுயியல் நிறுவனம், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் நிதிநல்கையுடன் ஒருங்கிணைந்த நெல், மீன் மற்றும் கோழிப்பண்ணை முறை ஆராய்ச்சித் திட்டம் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா பல்கலைக்கழக வேளாண்புலத்தில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பதிவாளர் மு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் வே.முருகேசன் சிறப்புரை வழங்கினார். சென்னை சர்வதேச  உயிர் நுட்பவியல் மற்றும் நச்சுயியல் நிறுவன இயக்குநர் அ. ரமேஷ், மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆய்வு நிறுவன ஆராய்ச்சி இயக்குநர் கே.ரேவதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் பல்கலைக்கழக  துணைவேந்தர் வே.முருகேசன், பதிவாளர்  மு. ரவிச்சந்திரன், வேளாண்புல முதல்வர் கே.தானுநாதன், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  மைய இயக்குநர் இராம.கதிரேசன், உழவியல் துறைத் தலைவர் சுப.நடராஜன் ஆகியோர் முன்னிலையில் மூன்று நிறுவன அதிகாரிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வு திட்ட முதன்மை ஆய்வாளர் இராம. கதிரேசன் தலைமையிலான 18 பேர் கொண்ட வேளாண் மற்றும் சமூக மருத்துவ விஞ்ஞானிகள் குழுவினரால் கடலூர் மாவட்டத்தில் மேற்கண்ட ஆராய்ச்சி திட்டம் விவசாயிகளின் நிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com