புதுச்சேரி

பிராந்திய அடிப்படையிலேயே  ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்:  ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

DIN

பிராந்திய அடிப்படையிலேயே ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் ஏ.ஜான்பிரிட்டோ, பொதுச்செயலர் எஸ்.மிஷேல் ஆகியோர் கூட்டாக புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பிய கடித விவரம் :
புதுச்சேரி கல்வித்துறை காரைக்காலில் காலியாகவுள்ள 145 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப முடிவு செய்துள்ளது. விரிவுரையாளர்களுக்கு ரூ.25 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.22 ஆயிரம், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் என மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யும் ஆசிரியர்களை காரைக்கால், புதுச்சேரியில் அந்தந்த பிராந்தியங்களில் தகுதி வாய்ந்தவர்களைக்கொண்டு நிரப்பவேண்டும்.
அவ்வாறு நிரப்பும்போது காரைக்காலில் நீண்ட காலமாக வேலைவாய்ப்பின்றி இருக்கும் 145 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களது பிராந்தியத்திலேயே வேலை செய்யும் வாய்ப்பும் கிடைக்கிறது.
கடந்த காலங்களில் செய்யப்பட்ட நியமனத்தில் மேற்குறிப்பிட்ட பிராந்திய ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், காரைக்காலில் பணியமர்த்தப்பட்டோர் அதற்குரிய ஊதியத்தை காரைக்காலில் பெற்றுக்கொண்டு, அந்தப் பணியை அவர்களது சொந்த பிராந்தியங்களான புதுச்சேரி, மாஹே, யேனாம் ஆகியவற்றில் செய்கிறார்கள். 
கடந்த 2004-ஆம் ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் எல்கேஜி, யுகேஜி ஆசிரியைகளாக பணியாற்றிய 21 பேர், 2007-இல் புதுச்சேரிக்கு பணியிடமாற்றம் பெற்றுச் சென்றனர். இதுவரை அந்தப் பணியிடங்கள் காரைக்காலில் காலியாகவே இருக்கின்றன.
இவ்வாறான அவலங்கள் காரைக்கால் பகுதியில் மீண்டும் ஏற்படாமல் இருக்க, புதிய வேலைவாய்ப்பை பிராந்திய அடிப்படையிலேயே செய்யவேண்டும். இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு சரியான முடிவுடன் செயல்படவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT