புதுச்சேரி

விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

DIN

புதுவையில் விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
காரைக்காலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே, ஆதிதிராவிடர் நலனுக்காக அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ள 15 அம்சக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 6-ஆம் தேதிக்குப் பிறகு ஆதிராவிடர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.
அம்பேத்கர் நினைவு நாளன்று அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் அம்பேத்கர் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துவது, ஆதிதிராவிடர்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து உயர்நிலை குழுவில் விவாதித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டமைப்பின் கௌரவத் தலைவர்  கே.ஆர். பக்கிரிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தலைவர் ஏ. நாகூரான், பொதுச் செயலர் என். காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT