புதுச்சேரி

18 மாதங்களில் 35 குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை

DIN

பதினெட்டு மாதங்களில் 35 குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை நடந்துள்ளதாக சைல்டு லைன் அமைப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்க நிர்வாக இயக்குநர் ஜோசப் அருமைச்செல்வம்,  புதுவை குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத் தலைவி தேவிப்பிரியா ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

புதுச்சேரி பல்நோக்கு சமூக சேவா சங்கம் மூலம் குழந்தைகளை பாதுகாக்க சைல்டு லைன் அமைப்பு செயல்பட்டு வருகிறது.  

கடந்த 2017 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரை சைல்டு லைன் உதவி எண் 1098-இல், 2,852 அழைப்புகள் பெறப்பட்டுள்ளன.  

அதில் 35 குழந்தை பாலியல் வழக்குகள் கையாளப்பட்டு முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

8 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.  107 குழந்தைகள் கொடுமைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்.  

கடந்தாண்டு சைல்டு லைன் மூலம் 13,110 பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

மேலும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சைல்டு லைன் மூலம் ஆண்டுதோறும் சைல்டு லைன் நண்பன் என்ற பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி,  இந்தாண்டுக்கான சைல்டு லைன் நண்பன் பிரசாரம் வரும் 14ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும்.

உணவு,  உடை,  இருப்பிடம்,  கல்வி,  பாதுகாப்பு உள்ளிட்டவை குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற நிலையில் செயல்பட்டு வருகிறோம். 

இதற்காக, புதுச்சேரியில் உள்ள குழந்தை காப்பகங்களை ஆய்வு செய்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். 

இந்த ஆய்வில் குழந்தை காப்பகங்களுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளோம். இதில் 50-க்கும் குறைவான மதிப்பெண் பெற்ற காப்பகங்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். 

மேலும்,  குழந்தை காப்பகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.  குழந்தைகள் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் பள்ளிகளில் இருந்து வீடு திரும்ப வேண்டும்.  அதன்படி, பள்ளிகள் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மட்டுமே இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT