நகராட்சி ஆணையரை மிரட்டியவர்களை கைது செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை

உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.

உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் உள்ளிட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் புதுவை பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை: 
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமிக்கு,  முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் இருவர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவத்தை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. 
காலாப்பட்டு தொகுதியில் தனியார் ரசாயன நிறுவனம் அப்பகுதி மக்களுக்காக 2014-ஆம் ஆண்டில் 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வழங்கும்  நிலையங்களை அமைத்து கொடுத்துள்ளது.  
இந்த நிலையங்களை பராமரிப்பது,  குடிநீர் வழங்கல் பணிக்கான ஊழியர் ஊதியம் என அனைத்தையும் அந்த நிறுவனமே வழங்கி வருகிறது. ஆனால், கல்யாணசுந்தரத்தின் அறக்கட்டளை பெயரால் இயக்கப்படுகிறது.
இதற்காக மூன்று ஆண்டுகளுக்கான ஒப்பந்தமும் உழவர்கரை நகராட்சியால் வழங்கப்பட்டுள்ளது.  
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கல்யாண சுந்தரம் தோல்வி அடைந்ததால் சுத்திகரிக்கப்பட்டகுடிநீர் சீராக வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
இந்தப் பின்னணியில்,  குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை உழவர்கரை நகராட்சியிடம் ஒப்படைக்க  ஏற்கெனவே சம்பந்தப்பட்டஅறக்கட்டளைக்கு நோட்டீஸ்அளிக்கப்பட்டது. 
இந்தப் பின்னணியில் நகராட்சி நிர்வாகம் அரசின் உத்தரவுப்படி குடிநீர் வழங்கும் நிலையங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. 
கல்யாணசுந்தரம் தரப்பில் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
தீர்ப்பின்படி இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையில் கல்யாணசுந்தரம் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து நகராட்சி ஆணையருக்கு கொலை மிரட்டல் விடுத்தது கடும் கண்டனத்துக்குரியதாகும்.
இப்பிரச்னையில் மாநில அரசும்,  துணைநிலை ஆளுநரும் அமைதி காப்பது கொலை மிரட்டல் விடுத்தவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்காகவே என்பது தெளிவாகிறது.  
ஆகவே,  மாநில அரசு உழவர்கரை நகராட்சி ஆணையரை மிரட்டிய நபர்களை கைது செய்யவும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பொய் புகார் மீது விசாரணை செய்து சம்பந்தப்பட்ட நபரின் மீது வழக்கு தொடரவும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com