பெட்ரோல் விலையை அரசே நிர்ணயிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

பெட்ரோலிய பொருள்கள் விலையை அரசே நிர்ணயம் செய்யக் கோரி புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோலிய பொருள்கள் விலையை அரசே நிர்ணயம் செய்யக் கோரி புதுச்சேரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
 புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார்.  மாநில துணைச் செயலாளர் ரூவியர்,  மாநிலச் செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் விளக்கவுரையாற்றினார். 
புதுவையில் மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,  கஞ்சா, ஹான்ஸ்,  பான்பராக்,  லாட்டரி உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்கள் விற்பனை மற்றும் பாலியல் தொழிலை தடுக்க வேண்டும், பெட்ரோல்,  டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதை ரத்து செய்து அரசே விலை நிர்ணயம் செய்ய 
வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com