நாரி சக்தி புரஸ்கார் விருது: சாதனைப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நாரி சக்தி புரஸ்கார் தேசிய விருதுக்கு தகுதியுடைய பெண்கள் நவ.26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாரி சக்தி புரஸ்கார் தேசிய விருதுக்கு தகுதியுடைய பெண்கள் நவ.26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சேவை, சாதனை புரிந்த தலைசிறந்த பெண்களுக்கான "நாரி சக்தி புரஸ்கார்' வழங்கப்பட உள்ளது.
 இந்தியாவில் உள்ள நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பிரிவின் கீழ் சேவை புரிந்தவருக்கும் தனித்தனியே சான்றிதழ் வழங்கப்படும். மொத்தம் 40 விருதுகள் வழங்கப்படவுள்ளன.
 விருதுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணியாற்றியிருக்க வேண்டும். தனிநபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதியன்று குறைந்தபட்சம் 25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். நிறுவனங்களில் பணிபுரியும், ஊதியம் பெறும் அதிகாரிகள் இந்த விருதுக்கு தகுதிபெற மாட்டார்கள்.
 தேசிய தேர்வுக் குழு தமது ஆய்வின் மூலம் பரிந்துரைக்கும் நபர்கள் தேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள தேர்வுக் குழுவின் மூலமே இறுதியாக தேர்வு செய்யப்படுவர். விருதைப் பெற புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை இத்துறையின் ட்ற்ற்ல்ள்;//ஜ்ஸ்ரீக்.ல்ஹ்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ.26-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com