ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்: புதுவை-மேகாலயா போட்டியை சமனில் முடித்த "கஜா'

புதுச்சேரியில் கஜா புயல் தாக்கத்தால் மழை தொடர்ந்து பெய்ததால், புதுவை-மேகாலயா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை சமனில் முடிவடைந்தது.

புதுச்சேரியில் கஜா புயல் தாக்கத்தால் மழை தொடர்ந்து பெய்ததால், புதுவை-மேகாலயா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை சமனில் முடிவடைந்தது.
 ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பிளைட் பிரிவில் புதுவை, சிக்கிம், மிஸோரம், மேகாலயா உள்ளிட்ட 9 அணிகள் மோதுகின்றன. இதில், புதுவை சி.ஏ.பி. அணி-மேகாலயா அணி மோதிய டெஸ்ட் போட்டி புதுச்சேரி அருகே துத்திப்பட்டு கிரிக்கெட் மைதானத்தில் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற புதுவை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 127.3 ஓவரில் 389 ரன் எடுத்தது.
 இதைத் தொடர்ந்து ஆடிய மேகாலயா அணி 112 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன் எடுத்தது. இதையடுத்து 63 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய புதுவை அணி புதன்கிழமை மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 95 ரன் எடுத்திருந்தது. அணி கேப்டன் ரோகித் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். வியாழக்கிழமை 4-ஆவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கஜா புயல் காரணமாக மழை பெய்ததால், போட்டி இடையிடையே பாதிக்கப்பட்டது. குறைந்த ஓவர்களே வீசப்பட்டன. கேப்டன் ரோகித் 4 ரன்னுடனும், அபிஷேக் நாயர் 16 ரன்னுடனும், பபித்அகமத் 10 ரன்னுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிற்பகல் நிலவரப்படி புதுவை அணி 47.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்திருந்தது. வெங்கட் 3 ரன்னுடனும், பங்கஜ்சிங் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் இந்த போட்டி சமனில் முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் புதுவை அணிக்கு 3 புள்ளிகளும், மேகாலயா அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com