108 அவசர கால ஊர்தி ஓட்டுநர்கள் போராட்டம்

ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும்,  பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோரிக்கை அட்டை அணிந்து

ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும்,  பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்தை 108 அவசர கால ஊர்தி (ஆம்புலன்ஸ்)  ஓட்டுநர்கள்  தொடங்கியுள்ளனர். 
  புதுவை அரசு சுகாதாரத் துறையில் செயல்படுத்தப்படும்  108 அவசர கால ஊர்தி சேவையில், புதுச்சேரியில் 63,  காரைக்காலில் 35,  மாஹேயில் 17,  ஏனாமில் 11 ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர்.  
இவர்களுக்கு மாதம் ரூ. 8 ஆயிரம் ஊதியம் தரப்படுகிறது.  ஊதியத்தை உயர்த்தி, பணி நிரந்தரம் செய்யக் கோரியும்,  ஓட்டுநர்களை நியமிக்கக் கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.
 இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் வரும் 24-ஆம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  நவ.24-ஆம் தேதி வரை பணிபுரியும் போது கோரிக்கை அட்டையை அணிந்து பணியாற்ற உள்ளனர்.
போராட்டத்துக்கு அவசர கால ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.  போராட்டம் தொடர்பாக ஆவர்கள் கூறுகையில்,  2005-ல் பணி அமர்த்தப்பட்டோம்.  பலகட்ட தேர்வு வைத்துதான் எடுத்தனர். 
புதுச்சேரியில் அரசு ஓட்டுநர்களுக்கு ரூ. 40 ஆயிரம் ஊதியம் தரும் நிலையில் எங்களுக்கு ரூ. 8 ஆயிரம் மட்டுமே தருகின்றனர்.
 அவசர ஊர்தியில் பணி அமர்த்தப்படவேண்டிய தொழில்நுட்ப ஊழியர்கள்,  உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் நோயாளிகளை வண்டியில் ஏற்றுவது, இறக்குவது போன்ற அனைத்து பணிகளையும் ஓட்டுநர்களே செய்ய வேண்டியுள்ளது.  இதனால் பொதுமக்களிடம் கெட்ட பெயர் ஏற்படுகிறது.  முறையான விடுப்பும் தருவதில்லை.  அதனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com