கஜா புயல்: பாதிக்கப்பட்ட  விளை நிலங்களில் அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.

புதுச்சேரியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை அதிகாரிகள்  செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
 கஜா புயலால் தமிழகத்தில் தஞ்சை,  நாகை,  திருவாரூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.  அதேபோல, புதுவை மாநிலத்தில் காரைக்கால் மாவட்டம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், இந்த கஜா புயல் புதுச்சேரியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
 இதனால், புதுச்சேரியில் உள்ள விவசாய விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டன.  குறிப்பாக காட்டேரிக்குப்பம்,  சந்தை புதுக்குப்பம்,  குமராபாளையம்,  கூனிச்சம்பட்டு,  மண்ணாடிப்பட்டு,  பாகூர்,  அரியாங்குப்பம்,  குருவிநத்தம்,  மடுகரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.  இப்பகுதிகளில் வேளாண் துணை வேளாண் இயக்குநர் வேணுகோபால் ராவ்,  வேளாண் அலுவலர் இளந்திரையன் உள்ளிட்டோர் விளை நிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  நெல்மணி பிடித்து பால் ஏறும் தருவாயில் இருந்த நெற்பயிர்கள் மடிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.   இதேபோல் கரும்பு,  வாழை,  மரவள்ளி போன்றவையும்  மடிந்ததால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com