அரசுத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

புதுவையில் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று புதுவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.

புதுவையில் அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று புதுவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் வலியுறுத்தியுள்ளது.
 இந்த அமைப்பின் மாநிலக் குழுக் கூட்டம் முதலியார்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மன்றம் சார்பில் இதுவரை நடைபெற்ற பணிகள், அமைப்பு நிலை செயல்பாடுகள் குறித்து மாநிலச் செயலாளர் அந்தோணி விளக்கினார்.
 அரசியல் நிலை, எதிர்கால செயல்பாடுகள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் அ.மு.சலீம், துணைச் செயலாளர் வி.எஸ்.அபிஷேகம் ஆகியோர் பேசினர்.
 அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் ரூவியர், பொருளாளர் ரவீந்திரன், ஏஐஎஸ்எப் மாநிலச் செயலாளர் எழிலன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7500-க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலையற்ற இளைஞர்களை மையப்படுத்தி நடைபெறும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் தாராள விற்பனை மற்றும் அழகு நிலையங்களில் நடைபெறும் பாலியல் தொழிலை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நவ. 14-ஆம் தேதி சட்டப்பேரவை அருகில் போராட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com