பல்கலை. ஆணழகன் போட்டி: மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர் சாம்பியன்

புதுவை மத்திய பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டியில் மணக்குள விநாயகர் கல்லூரியின் கட்டடக் கலைத் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் வி. விஷ்ணுராம் சாம்பியன் பட்டம் வென்றார்.

புதுவை மத்திய பல்கலைக்கழக அளவிலான ஆணழகன் போட்டியில் மணக்குள விநாயகர் கல்லூரியின் கட்டடக் கலைத் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் வி. விஷ்ணுராம் சாம்பியன் பட்டம் வென்றார்.
 புதுவை பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு இடையிலான ஆணழகன் போட்டியை அண்மையில் நடத்தியது. இதில் எழுபது கிலோவுக்கு மேற்பட்ட பிரிவில் சிறந்த உடலமைப்புக்காக, "மிஸ்டர் பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி' என்னும் பட்டத்தை மாணவர் விஷ்ணுராம் பெற்றார். ஆணழகன் பட்டம் வென்ற மாணவர் விஷ்ணுராமை, ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன் எம்.எல்.ஏ., செயலாளர் கே.நாராயணசாமி, மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் மற்றும் முதல்வர் வி.எஸ்.கே.வெங்கடாசலபதி, கட்டடக் கலை கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com