18 நவம்பர் 2018

புதுச்சேரியில் ராவண காவிய இலக்கிய சொற்பொழிவு

By  புதுச்சேரி,| DIN | Published: 11th September 2018 08:48 AM

புதுச்சேரியில் ராவண காவிய இலக்கிய சொற்பொழிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 புதுவை, தமிழகம் இணைந்த பகுத்தறிவாளர் கழகம் புலவர் குழந்தை இயற்றிய ராவண காவியம் என்னும் இலக்கியம் பற்றிய தொடர் சொற்பொழிவை முனைவர் க.தமிழமல்லன் அவர்களைக் கொண்டு ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.
 அதன் ஒன்பதாவது சொற்பொழிவில் ராவண காவியத்தின் தசரதன் சூழ்ச்சிப் படலம், கான்புகு படலம் ஆகியவை பற்றி தனித் தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் உரையாற்றினார்.
 புதுவை தமிழ்ச் சங்க அரங்கில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவர் மு.ந.நடராசன் தலைமை வகித்தார். புதுவை திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி நிகழ்ச்சியை தொடக்கிவைத்தார்.
 செயலாளர் நெ.நடராசன் வரவேற்றுப் பேசினார். பொ.கு.உறுப்பினர் விலாசினி, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சடகோபன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 ஒன்பதாவது சொற்பொழிவை நிகழ்த்திய முனைவர் க.தமிழமல்லன் அவர்களை அனைவரும் பாராட்டினர். இறுதியில் சிவராசன் நன்றி கூறினார்.
 

More from the section

பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
சட்டக் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
"கஜா' புயல் நிவாரணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை
அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை மகா சமாதி தினம்
வீட்டில் நகை திருடிய பெண் கைது