சனிக்கிழமை 17 நவம்பர் 2018

இந்திய கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 12th September 2018 06:56 AM

வரி உயர்வுகளை திரும்பப் பெறக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் மக்களை வாட்டி வதைக்கும் வரி உயர்வுகளை திரும்பப் பெற வலியுறுத்தியும்,  தட்டாஞ்சாவடி தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தட்டாஞ்சாவடி தொகுதிக் குழு சார்பில் கொக்குப் பூங்கா அருகில் உள்ள அரசு அச்சகம்  எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொகுதிச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ஹேமலதா,  எழிலன்,  செல்வம், தனஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  
மாநிலச் செயலாளர் அ.மு.சலீம்,  நிர்வாகக் குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் பேசினர். 
கிளைச் செயலாளர்கள் கருணாகரன்,  செந்தில்,  சத்யசீலன்,  லோகு,  மூர்த்தி,  சிவக்குமார்,  ரவிச்சந்திரன்,  வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் வீட்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்,  குடிநீர்க் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், எரியாத மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்,  சாலைகளை சீரமைக்க வேண்டும்,  இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

More from the section

புதுவையில் 5,358 பேர் முகாம்களில் தஞ்சம்
புயல் சேதம் குறித்த அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பு: புதுவை அரசு அறிவிப்பு
புதுச்சேரியில் சூறாவளிக் காற்றுடன் மழை: மின்துண்டிப்பால் மக்கள் அவதி
புதுவையில் 1,106 வீடுகள் சேதம்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சேதம் தவிர்ப்பு: அமைச்சர் நமச்சிவாயம்