திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

முன்னாள் எம்.பி. கண்ணன் புதிய கட்சி தொடங்க திட்டமா?

DIN | Published: 12th September 2018 06:57 AM

முன்னாள் எம்.பி. கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை (செப்.12) முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.  
புதிய கட்சியை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவை சட்டப்பேரவை முன்னாள் தலைவரும்,   முன்னாள் எம்.பி.யுமான கண்ணன் புதுவை அரசியலில் முக்கிய சக்தியாக விளங்கினார்.  
சில ஆண்டுகளாக அரசியலில் ஏற்பட்ட பிரச்னைகளால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
அண்மையில் அவரது ஆதரவாளர்கள் அவரைச் சந்தித்து புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கண்ணன் மெளனம் காத்து வந்தார். இந்த நிலையில், கண்ணன் புதன்கிழமை மாலை தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளார்.  அதில்,  விரிவாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.  
அப்போது கட்சி தொடங்கும் முடிவை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

More from the section

தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் புதுவையில் தொடக்கம்
சுண்ணாம்பாறு படகு குழாமில் விரைவில் டோக்கன் முறை அமல்: சுற்றுலாக் கழகத் தலைவர் தகவல்
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அக். 12-இல் புதுச்சேரி வருகை
ரஃபேல் விமான பேர ஊழலை மக்களிடம் விளக்க வேண்டும்: இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர்
காவலர் தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தும் முடிவை ஆளுநர் ஏற்க வேண்டும்: முன்னாள் எம்.பி. வலியுறுத்தல்