செப்.20-இல் சிறப்பு வான்நோக்கு நிகழ்வு

புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு வான் நோக்கு நிகழ்வு வருகிற 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.

புதுவை அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு வான் நோக்கு நிகழ்வு வருகிற 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது.
 புதுச்சேரி லாஸ்பேட்டை தாகூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி அருகே உள்ள பாபு ஜெகஜீவன் ராம் சிலை அருகில் இந்த சிறப்பு வான் நோக்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இந்த வான்காட்சி நவீன தொலைநோக்கி உதவியுடன் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியில் இந்தியாவின் தலைசிறந்த வானியல் வல்லுநரும், புதுவை அறிவியல் இயக்க செயற்குழு உறுப்பினரும், கருத்தாளருமான பேரா. மதிவாணன் விளக்கம் அளிக்கிறார். அன்றைய தினத்தில் வானம், வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களை வெறும் கண்களாலும், தொலைநோக்கி உதவியுடனும் கண்டு களிக்கலாம்.
 அதனைப் பற்றிய கூடுதல் தகவல்களை கருத்தாளர் எடுத்துரைக்க உள்ளார்.
 மேலும், வான்வெளி மண்டலம் தொடர்பான விளக்க மற்றும் உரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
 நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள், வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பை உறுதி செய்ய,
 புதுவை அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் ஹேமாவதியை, 9443262773 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், செயலாளர் அருண் நாகலிங்கத்தை, 9894926925 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com