புதுச்சேரி

காவலர் தேர்வு வயது வரம்பு விவகாரம்: ஆளுநர் கிரண் பேடி மீது மாணவர் கூட்டமைப்பு புகார்

தினமணி

காவலர் தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்தும் விவகாரத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற அரசியல் செய்வதாக, புதுவை யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
 இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: காவலர் தேர்வு வயது வரம்பு தளர்வு விவகாரத்தில் ஆளுநர் கிரண் பேடியின் செயல் வருத்தமளிக்கிறது.
 மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு பரிந்துரை செய்தும் காவலர் தேர்வுக்கான வயது வரம்பை சட்ட காரணங்களைக் காட்டி தொடர்ந்து நிராகரிப்பது ஏற்புடையது அல்ல.
 பிரதமரின் உத்தரவின் கீழ் அமைக்கப்பட்ட காவல் சீர்திருத்தக் குழு பரிந்துரைப்படி காவலர் தேர்வு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வயது வரம்பு அக்குழு பரிந்துரைத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
 எனவே, வயது தளர்வு கொடுத்தால் அது இருக்கும் கொள்கையை மீறியதாகும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
 தேசிய அளவில் அமைக்கப்பட்ட குழுவால் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு எனக் கூறும் ஆளுநர், புதுவை மாநிலத்தைத் தவிர வேறு எந்தெந்த மாநிலங்களில் இந்த வயது வரம்பை பின்பற்றுகின்றனர் என்பதை வெளிப்படுத்த முடியுமா.
 புதுவை, தமிழக கல்வி மற்றும் காவலர் சட்டத்தை பின்பற்றுகிறது. தமிழகத்தில் வயது வரம்பு 18 முதல் 22 என பின்பற்றப்படவில்லை. அதுபோல, யூனியன் பிரதேசமான தில்லி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், குஜராத் என எந்த மாநிலமும் 18 முதல் 22 வயதை பின்பற்றவில்லை.
 மேலும், புதுவையில் கடந்த 8 ஆண்டுகளாக காவலர் தேர்வு நடத்தப்படாததால் தகுதியிழந்துள்ள இளைஞர்கள் இந்த ஆண்டு நடத்தும் தேர்வில் தங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு கோரி நிற்கும் இளைஞர்களுக்கு எதிராக அதிகாரத்தை திணித்து, அவர்களை நசுக்க நினைப்பதாகவே உணர்கிறோம்.
 புதுவை மாநில அரசின் ஆள்சேர்ப்பு வழிகாட்டுதலின்படி, சி பிரிவு ஊழியர்களுக்கான வயது வரம்பு தளர்வை முடிவு செய்யும் உரிமை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உள்ளது.
 இந்த நிலையில், புதுவை மாநிலத்தின் நடைமுறை நிர்வாகம் சார்ந்த அதிகாரத்தை வைத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளை ஆளுநர் குழி தோண்டி புதைப்பதாக கருதுகிறோம்.
 வேலைவாய்ப்பு இழந்த இளைஞர்களின் சூழலை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தை நாட இருப்பதாகவும், அதுவரை விண்ணப்பம் பெறும் தேதியை தள்ளி வைப்பதாகவும் அறிவித்த முதல்வர் நாராயணசாமிக்கு நன்றி.
 நீதி வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளார் சுவாமிநாதன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT