மணக்குள விநாயகர் கல்லூரியில் பொறியாளர் தினம்

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரியை அடுத்த மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பொறியாளர் தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
 இதையொட்டி தேசிய அளவில் செயல்திட்டம் சமர்ப்பிக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில், 100-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 400-க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை சமர்ப்பித்தனர்.
 சிறந்த செயல் திட்டங்களை சமர்பித்தவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை பகிர்ந்து அளிக்கப்பட்டது.
 மேலும், 2017 - 2018 கல்வியாண்டில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்த செயல்திட்டங்களில், சிறந்த செயல் திட்டங்கள் துறை வாரியாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு திட்டத்துக்கும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
 ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி. சுகுமாறன் எம்.எல்.ஏ, செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஜோகோ கார்ப்பரேஷன் இயக்குநர் ராஜேந்திரன் தண்டபானி கலந்து கொண்டு சிறப்பான திட்டங்களை சமர்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து கூறி, பரிசு வழங்கி பாராட்டினர். முன்னதாக, இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறைத் தலைவர் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் அன்புமலர், இயந்திரவியல் துறைத் தலைவர் வேல்முருகன் அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com