கல்லூரியில் தொழில்பயிற்சி பயிலரங்கம்

புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் தேசிய அளவிலான தொழில் பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் மின் - மின்னணு துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி மையம் ஆகியவை இணைந்து இந்த பயிலரங்கத்தை நடத்தின. சூரிய ஒளி சக்தியை உருவாக்கும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினர்.
அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல முதல்வர் சி.ஆண்டானி ஜெயசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பயிலரங்கத்தின் நோக்கம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக பயிலரங்கத் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் எஸ். மலர்க்கண் வரவேற்றார்.
நிறைவு நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலை. பொறியியல் புல இயக்குநர் எம்.ராமசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினார்.
பயிலரங்க ஒருங்கிணைப்பாளர்களான எம்.ஐ.டி. கல்லூரி மின் மற்றும் மின்னணு துறைத் தலைவ ர் சி.சண்முகசுந்தரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பொறியியல் புலப் பேராசிரியர், கழக உறுப்பினர் எம். முகமது தமிம் அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்தப் பயிலரங்கில் புதுவை, தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 70-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பயிலரங்க ஏற்பாடுகளை எம்.ஐ.டி. கல்லூரி மின் மற்றும் மின்னணு துறைப் பேராசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். எம்.ஐ.டி. கல்லூரி உதவிப் பேராசிரியர் வே.திபீனா நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com