புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் செயற்கை மணல் பரப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

DIN


புதுச்சேரி கடற்கரையில் தொடர்ந்து அதிகரித்து வரும் செயற்கை மணல் பரப்பால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி கடற்கரையில் தலைமைச் செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், கூம்பு வடிவத்தில் 120 மீட்டர் தொலைவுக்கு அலைகளின் ஓட்டத்தைத் தடுத்து மணலைச் சேகரிக்கும் வகையிலான அமைப்பு உருவாக்கப்பட்டு, கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தப் பணிக்கு முன் 100 மீட்டர் தொலைவுக்கு கடலில் கற்கள் கொட்டப்பட்டன. இதனால், தலைமைச் செயலகம் எதிரே இருந்து காந்தி சிலை வரை மணல் பரப்பு உருவாகத் தொடங்கியது. கூம்பு வடிவ அமைப்பு ஆழ்த்தப்பட்ட பிறகு தற்போது பெரியளவில் செயற்கை மணல் பரப்பு உருவாகியுள்ளது. இந்த மணல் பரப்பு சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்தது.
இதனிடையே, தலைமைச் செயலகம் எதிரே இருந்து டூப்ளே சிலை வரை உள்ள கடற்கரைச் சாலை முழுவதும் 100 அடி இடைவெளியில் காவல் துறையினர் எச்சரிக்கை பலகைகளை அமைத்துள்ளனர்.
மொஹரம் பண்டிகையையொட்டி, விடுமுறை விடப்பட்டதால் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் கடற்கரையில் செயற்கை மணல் பரப்பில் அமர்ந்து மகிழ்ந்தனர். சிலர் எச்சரிக்கையை மீறி, கடலில் இறங்கி குளித்தனர். அவர்களை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT