மது, சாராயக் கடைகளை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் மது, சாராயக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் மது, சாராயக் கடைகளை அகற்றக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாலையில் புகழ் பெற்ற சித்தானந்தா கோயில், வெக்காளி அம்மன் கோயில் மற்றும் தனியார் பள்ளிகள், வர்த்த நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் அருகே புதிதாக மதுக்கடை, சாராயக்கடை, கள்ளுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், மதுப் பிரியர்களால் கென்னடி கார்டன் நுழைவுப் பகுதி திறந்தவெளி மது அருந்துமிடமாக மாறியுள்ளது. ஆகவே, இங்குள்ள மதுக்கடை, சாராயக் கடைகளை அகற்ற வேண்டும், புதிய கடைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என கருவடிக்குப்பம் மதுபான, சாராயக் கடை எதிர்ப்புக் குழுவினர் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக கையெழுத்து இயக்கம் நடத்தி ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர், கலால் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் புகார்கள் அளிக்கப்பட்டன. ஆனாலும் அந்தப் பகுதியில் உள்ள மது, சாராயக் கடைகள் அகற்றப்படவில்லை.
இந்த நிலையில், கருவடிக்குப்பம் சாலையில் உள்ள மது, சாராயக் கடையை அகற்ற வேண்டும், புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, கருவடிக்குப்பம் எதிர்ப்புக் குழு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கருவடிக்குப்பம் சுடுகாடு அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, போராட்டக்குழு தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் லெனின் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சாமிப்பிள்ளைத்தோட்டம், கருவடிக்குப்பம், கென்னடி கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com