மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக டெபாசிட் இழக்கும்

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக டெபாசிட் இழக்கும் என்று அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கூறினார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக டெபாசிட் இழக்கும் என்று அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் ஆ.அன்பழகன் கூறினார்.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
திமுக துணைவோடு ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாத மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது.  
மக்களுக்குத் தேவையில்லாத போராட்டங்களை 9 தடவை நடத்தியுள்ளார்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மக்களுக்கு தொல்லை தரும் விதத்தில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்.   மக்கள் மீது உண்மையில் அக்கறை இருந்தால் மாநில அரசு விதிக்கும் வரிகளை குறைத்து இருக்கலாம். 
சட்டப்பேரவையில் 200-க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை அமைச்சர்கள் அறிவித்தனர்.  ஆனால், ஒன்றுகூட நிறைவேற்றவில்லை. முதியோர் உதவித்தொகை பெற 22 ஆயிரம் பேர் தகுதி பெற்று விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் கந்தசாமி 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும்,  இந்த பேரவைக் கூட்டத்தில் 9 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். ஆனால் ஒருவருக்குக் கூட வழங்கவில்லை.  
மேலும், ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களை நிதித்துறை செயலர் தடுத்து நிறுத்துவதாக குற்றம் சாட்டினார். 
பின்னர் அரசு அவருடன் சமரசம் ஏற்படுத்திக் கொண்டது.    அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லை.  எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக டெபாசிட் இழப்பு உறுதி.
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற எம்.எல்.ஏ.க்களை தில்லிக்கு அழைத்துச் சென்றார்.  அதற்கு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை.  அரசுத் துறைகளில் உள்ள எந்த குழுக்களையும் கூட்டவில்லை. 
கடந்த 15 தினங்களுக்கு முன் மின்துறையில் சீனாவில் இருந்து ஸ்மார்ட் மின் மீட்டரை வாங்கியது குறித்து சட்டப் பேரவைக் குழுக்கள் ஆய்வு செய்தன.  முடிவில் வீடுகளில் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் மீட்டரை அகற்ற வேண்டும்,  முதலில் வணிக நிறுவனங்களில் பொருத்த வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. அந்த முடிவை அமல்படுத்தவில்லை.  
குழுக்களின் முடிவை அமல்படுத்தவில்லை என்றால் குழுவில் நீடிப்பது பற்றி மறுபரிசீலனை செய்வோம்.  
பொதுப்பணித் துறையில் ரூ.120 கோடிக்கு ஊதியம் வழங்கப்படுகிறது.  ஆனால் அந்த தொகைக்குக்கூட திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றார் அன்பழகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com