குழந்தைப் பருவ புற்றுநோய் விழிப்புணர்வு மனிதச்சங்கிலி

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தையொட்டி, ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் அருகே விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினத்தையொட்டி, ஜிப்மர் மருத்துவ புற்றுநோயியல் துறை சார்பில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் அருகே விழிப்புணர்வு மனிதச்சங்கிலி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அனைவருக்கும் குழந்தை பருவ புற்றுநோய்க்கான நிறமான தங்க நிறத்தில் ரிப்பன்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜிப்மரிலிருந்து ராக் கடற்கரை வரை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தில்லி கேன்கிட்ஸ் மண்டல இயக்குநர் ராஜலட்சுமி ரவிக்குமார், புதுவை 
பள்ளிக் கல்வி இயக்குநர் ருத்ர கெளடு, ஜிப்மர் மருத்துவக் கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதுகுறித்து  மருத்துவ புற்றுநோயியல் தலைவர் டாக்டர் பிஸ்வஜித், டாக்டர் பிரசாந்த் கணேசன் ஆகியோர் கூறுகையில், இந்தியாவில் குழந்தைப் பருவ புற்றுநோய் 1.61 - 4.81 சதவீதமாக உள்ளது. ஒவ்வொரு புற்றுநோயும் ஆண்டுக்கு 1.1 சதவீதம் உயர்ந்து வருகிறது. ரத்த புற்றுநோய், லிம்போமா மற்றும் மூளை சம்பந்தப்பட்ட கட்டி ஆகியவை ஜிப்மருக்கு சிகிச்சைக்காக வரும் பொதுவான குழந்தை பருவ புற்றுநோய்களாகும்.
ஜிப்மரில் 2010-இல் புற்றுநோய் தகவல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 
ஜிப்மரில் சிகிச்சை கைவிடப்பட்ட விகிதம் 20 - 25 லிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த விகிதத்தை மேலும் குறைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். நிதி மற்றும் முக்கியத் தேவைகளின் ஆதரவை ஏற்படுத்துதல் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர் மருத்துவ சேவை மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றை ஒழுங்குபடுத்தி வருகிறோம் என்றனர் அவர்கள்.
இதில் அரசு சாரா அமைப்புகளான கேன்கிட்ஸ், ஜீவ்தயா அறக்கட்டளை, ஜல், சஞ்சிவினி உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com