புதுவை பல்கலையில். அகான்ஷா விழா

புதுவை பல்கலைக்கழக சுற்றுலாத்துறை சார்பில் அகான்ஷா விழா பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 16, 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது.  

புதுவை பல்கலைக்கழக சுற்றுலாத்துறை சார்பில் அகான்ஷா விழா பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 16, 17 ஆம் தேதிகளில் நடைபெற்றது.


விழாவை இந்திய சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத் தலைவர் பிரணாப் சர்க்கார் தொடக்கி வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங், ஆஞ்சநேய சுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.

வணிகவியல் மாணவர்களையும், சுற்றுலாத் துறை பங்குதாரர்களையும் ஒன்றிணைத்து தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக இந்த விழா நடைபெற்றது. இதில், சுற்றுலா மற்றும் அதன் இதர துறைகளில் சிறந்து விளங்கிய பங்குதாரர்கள், முனைவர்கள் பலர் பங்கேற்று குழு விவாதம், சிறப்புச் சொற்பொழிவுகள் மூலம் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

விழாவில், புதுவை பல்கலைக்கழக சுற்றுலாத் துறையின் பத்திரிகை நூல் யாத்ராவின் 11 ஆவது பதிப்பும், டாக்டர் அனுப் சந்திரனின் பர்ன்ழ்ண்ள்ம் ஹய் ர்ஸ்ங்ழ்ஸ்ண்ங்ஜ் என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. சிறப்புப் பரிசுகளை வடிவமைத்து உருவாக்கிய வாணிதாசன் பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

ஒடிஸா சுற்றுலா மேம்பாட்டுத் துறையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பிரஞ்சி மிஸ்ரா சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் தக்ஷின சித்ரா அருங்காட்சியக துணை இயக்குநர் சரத் நம்பியார், வணிக இயக்குநர் அருண் பிங்லே, பல்கலைக்கழக சுற்றுலாத் துறை தலைவர் சம்பத்குமார்  ஸ்வெயின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிறைவு விழாவில், பல்கலைக்கழக பண்பாட்டுத் தொடர்பாளர் ராஜீவ் ஜெயின், புதுச்சேரி சிஐஐ தலைவர் ம. நந்தகுமார், பல்கலைக்கழக முன்னாள் மாணவரும்,  தொழிலதிபருமான நவீன் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com