நிதித் துறைச் செயலர் தகவல்

புதுவை அரசின் பிணைய பத்திரங்களுக்கு விரைவில் முதிர்வு தொகை வழங்கப்படவுள்ளது என்று நிதித் துறைச் செயலர் வி. கந்தவேலு தெரிவித்தார்.

புதுவை அரசின் பிணைய பத்திரங்களுக்கு விரைவில் முதிர்வு தொகை வழங்கப்படவுள்ளது என்று நிதித் துறைச் செயலர் வி. கந்தவேலு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை அரசு மாநில வளர்ச்சிக் கடனுக்காக,  நிதித் துறை அறிவிக்கை மூலம் கடந்த 2009-ஆம் ஆண்டு திரட்டிய கடன் தொகை ரூ.247.48 கோடி (8.55 சதவீதம் வட்டி வீதம்) வருகிற மார்ச் 18-ஆம் தேதியன்று, அரசு பிணைய பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும். பணக்கொடுப்பாணை (பே ஆர்டர்) அல்லது மின்னணு பரிமாற்றம் மூலம் உரிய தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 
பிணையப் பத்திரங்களை வைத்துள்ளவர்கள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகள், அதன் உபவங்கிகள், அரசு கருவூலங்கள்,  இவற்றில் அவர்கள் எதன் மூலம் மேற்சொன்ன பிணையப் பத்திர வட்டியை  தற்போது பெற்றுக்கொண்டு வருகின்றனரோ, அங்கு சமர்ப்பித்து முதிர்வுத் தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேற்சொன்ன வழிகளில் வங்கிக் கணக்கு விவரங்கள் இல்லாத பட்சத்தில் பிணையப் பத்திரதாரர்கள், ரிசர்வ் வங்கியின் பொது கடன் பிரிவு அலுவலகத்தில் பிணையப் பத்திரங்களை முதிர்வு தேதிக்கு இருபது நாள்கள் முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். 
முதிர்வு தொகையை முன்பு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அல்லாது வேறு இடங்களில் பெற விரும்புவோர் பிணையப் பத்திரங்களின் பின்புறம் அசலை பெற்றுக்கொண்டதாக சான்றளித்து அவற்றை ரிசர்வ் வங்கியின் பொதுக்கடன் பிரிவுக்கு காப்புறுதி செய்யப்பட்ட பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில், அரசு கருவூலம் அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளைகள் அல்லது அதன் உப வங்கிகளின் கிளைகள் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்
கந்தவேலு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com