பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியூ ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியூ தொழிற்சங்கத்தினர் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் டவர்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது, 4 ஜி சேவையை உடனே வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யாமல் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்தை ஆதரித்து சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் தலைமை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியூ பிரதேச தலைவர் முருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள், பிரசேத குழு உறுப்பினர் முருகன், இந்திய வாலிபர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்றோர், பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வலியுறுத்தும் கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றி, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். தொடர்ந்து, பொதுத்துறைக்கு பாதகமில்லாத கொள்கை முடிவுகளை அரசு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com