வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? உறுதி செய்ய பிப்.23, 24-இல் சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பிப்.23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அறிந்துகொள்ளலாம் என்று புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பிப்.23, 24-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் அறிந்துகொள்ளலாம் என்று புதுவை தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  எதிர்வரும் மக்களவை தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் பிப்.23-ஆம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளன. அதன்படி புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பிப்.23,  24 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் பட்டியலுடன் அமர்ந்திருப்பார்கள்.
எனவே, பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.  வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பினும்,  தங்களின் பெயர் தற்போதைய வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே வாக்குப்பதிவு செய்யலாம். 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயரை உடனே பதிவு செய்ய பாஸ்போர்ட் அளவு கலர் புகைப்படம்,  இருப்பிடச் சான்றிதழ்,  வயதுச் சான்றிதழ்,  புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைபெற்றிருப்பின் அதனுடைய நகல் ஆகிய ஆவணங்களுடன் உங்களின் வாக்குச்சாவடியில் அமர்ந்துள்ள வாக்குச் சாவடி அலுவலர்களை தொடர்புகொள்ளலாம். 
 மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கும் விண்ணப்பப் படிவங்கள் பெறப்படும். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பைத் தந்து தங்களின் வாக்குரிமையை உறுதிபடுத்தி வரும் தேர்தலில் வாக்களிக்கவும் மற்றும் ஒரு பிழையில்லா வாக்காளர் பட்டியல் தயாரிக்க தேர்தல் துறைக்கு உதவ வேண்டும் எனத்  தெரிவித்துள்ளார் கந்தவேலு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com