புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனை கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்: மருத்துவர்கள் மீது உறவினர்கள் புகார்

தினமணி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த இளம்பெண் அங்குள்ள கழிப்பறையில் வெள்ளிக்கிழமை குழந்தையைப் பெற்றெடுத்தார். இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அந்தப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
 தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை பூவனூரைச் சேர்ந்தவர் சுப்புராயன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா (21). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 இந்த நிலையில், கர்ப்பிணியான சுதா தனது முதல் பிரசவத்துக்காக வெள்ளிக்கிழமை அவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள கிளியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பனிக்குடம் உடைந்துவிட்டதால், உடனடியாக ஜிப்மருக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.
 இதையடுத்து, சுதாவின் உறவினர்கள் அவரை தீவிர சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதித்துள்ளனர். ஜிப்மரில் உள்ள மருத்துவர்கள் சுதாவை பரிசோதித்து பார்த்துவிட்டு, குழந்தை பிறக்க சில நாள்கள் ஆகும் எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
 இதனிடையே, சுதாவுக்கு தொடர்ந்து பிரசவ வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், ஜிப்மர் வளாகத்திலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் சுதா இயற்கை உபாதையைக் கழிக்க கழிப்பிடத்துக்கு சென்ற போது, அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
 இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து சுதாவையும், குழந்தையையும் மீட்டு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 உறவினர்கள் புகார்: இதனிடையே, சுதா கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்ததற்கு, மருத்துவர்கள் சரியாக பரிசோதிக்காததே காரணம் என்றும், அலட்சியத்துடன் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தப் பெண்ணின் உறவினர்கள் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

ரூ.1,700 கோடி அபராதம்: காங்கிரஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT