ஐ.ஐ.டி. தேர்வில் சிறப்பிடம்

ஐ.ஐ.டி. நடத்திய தேர்வில் புதுவை மாநிலம், மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

ஐ.ஐ.டி. நடத்திய தேர்வில் புதுவை மாநிலம், மதகடிப்பட்டு ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
 மாணவர்களின் கற்றல் திறனை பலப்படுத்தும் விதமாக ஸ்ரீமணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயந்திரவியல் துறை பல்வேறு தேசிய அளவிலான தேர்வுகளுக்கு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
 இதன் ஓர் அங்கமாக ஐ.ஐ.டி. நிறுவனம் தேசிய அளவில் நடத்தும் என்.பி டி.ஈ.எல் தேர்வில் அளவியல் பொறியியல் (என்ஜினீயரிங் மெட்ரோலோஜி) பாடப் பிரிவில் அந்தத் துறை மாணவர்கள் பங்கேற்று 12 வாரங்கள் பயிற்சி பெற்றனர். இதனிடையே, அகில இந்திய அளவிலான கணினி வழித் தேர்வில் பங்கேற்ற இந்தக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
 மாணவர் மோஹித் கோல்ட் சிறப்பிடம் பெற்றார். அகில இந்திய அளவிலான சிறப்பு மெண்டர்ஷிப் சான்றிதழை பேராசிரியர் கருணாகரனும், முதன்மைத் தகுதிச் சான்றிதழை பேராசியர்கள் சத்யபிரதாப், சந்தோஷ் குமார் ஆகியோர் பெற்றனர்.
 தேர்வில் சாதனை படைத்த மாணவர்கள், பேராசிரியர்களை ஸ்ரீமணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம்.தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி , துறைத் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com